Tuesday, March 15, 2011

என்று மாறும்???

பெண்ணியம் பேசுவதையும்
பாரதியம் பேசுவதையும்
பைத்தியமெனப் பார்க்கும்  நமது
பாரபட்ச சமூகத்தின்
நிலை என்று மாறும்???

பெண்களை சிறுவயதிலிருந்தே
அடுப்பங்கரை வேலைக்கும்
ஆயா வேலைக்கும்
தயாரிக்கும் நமது
தரங்கெட்ட சமூகத்தின்
நிலை என்று மாறும்???

அரசியல் ஆதரங்களுக்காகவும்
ஆட்சியைப் பிடிக்கவும்
அப்பாவி மக்களை
ஆண்டியாக்கும் நமது
அராஜக சமூகத்தின்
நிலை என்று மாறும்???

ஊழல் செய்வதும்
ஊரை ஏமாற்றுவதும்
உலகத்தில் புதிதல்ல என்று
ஊறிப்போன நமது
உறுதியற்ற சமூகத்தின்
நிலை என்று மாறும்???

என்று மாறும் என்று மாறும்
என்று எழுதிக் கொண்டே
இருக்கும் நமது
இயலா சமூகத்தின்
நிலை என்று மாறும்???!!!

2 comments:

  1. Nice one! Congratulations on your first blog! keep it coming!

    ReplyDelete