Monday, September 24, 2012

ஊடகங்கள்


ஊடகங்கள் மீது 
எனக்கு ஊடல்...!!
உன் மீதிருந்த நம்பிக்கை 
உடைந்து போனது...!!
உன்னில் உலா வரும் 
செய்திகள் அனைத்தையும் 
உண்மையா என 
ஆராய வேண்டியுள்ளது ...!!

கணினி உலகில் 
கவனமாய் செய்தி கேட்க 
துளியும் நேரமின்றி 
திரிந்தோடும் போது....
செய்தியை செவி மடுத்து 
செம்மையானவையா என 
சேதியறிய ஊடகமே 
உலக மக்களுக்கு நேரமில்லை...!!

ஒவ்வொரு கட்சிக்கும் 
ஒவ்வொரு தொலைக்காட்சி...!!
இல்லை...இல்லை...
செய்திகள் சொல்லுவதற்கு என்றே 
சிறப்பாக ஒன்றுமுண்டு ...!!
ஒன்று பொருள் ஈட்ட ...
இன்னொன்று புகழ் ஈட்ட...!!

செய்திகள் தொலைக்காட்சியில்
சொல்லப்படுவது 
செய்திகளா? இல்லை பிரச்சாரமா? 
ஆண்டு முழுவதும் 
அழகான பிரச்சாரம் 
அரங்கேறிக் கொண்டிருக்கிறது...!!

எது சரி? எது தவறு?
என்று எப்படி 
எடுத்தறிவது
எளிளையான மக்கள்...???

Wednesday, August 15, 2012

நாணயம்

நாணயம் தயாரித்த போதே 
மனிதனின் 
நாணயம் தவறி விட்டதோ....??!!

Tuesday, March 27, 2012

மேகமே உறுதி கொடு...!!!


கருமையான மேகக் கூட்டங்களே ...
கூடிக் கூடி எங்கே போகிறீர்கள்??
வெண்மை மனம் கொண்ட 
வஞ்சமில்லா மனிதர்கள் 
வாழும் இடம் தேடியா ??
வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள் .....
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் 
வாடியவர்கள் இங்கில்லை ....
தனியொருவனுக்கு உணவில்லையெனில் 
ஜகத்தினை அழித்திடுவோம் என்ற 
தன்னலமற்றவர்கள் இங்கில்லை...
மோதி முட்டி உடைந்து மழையைக் கொட்டு... 
மழை நீரால் மாந்தர்களைக் கழுவு...
மனசாட்சியைத் தட்டி எழுப்பு ...
உறங்குவது போல் உலகை ஏமாற்றி 
உல்லாசத்தில் இருக்கும் எங்கள்
உள்மனதை உண்மையாக்கு...
உண்மையாய் உலகில் வாழ
உறுதி கொடு....!!!


Sunday, February 26, 2012

தொலைக்காட்சி


வீட்டில் அனைவருக்கும் 
விருப்பமானவன் நீ .....
அனைவரையும் அடக்கி 
அமரச் செய்கிறாய் உனது முன்...
ஐம்புலன்களையும் அடக்கி 
ஐக்கியமாக்குகிறாய் உன்னுடன்...
சிந்தனைகளைச் சிறகொடித்து 
சிறை பிடிக்கிறாய்...
மனமெதிலும் ஒன்றாமல் 
மசியம் செய்து வைக்கிறாய்...
நீ நல்லவனா.... கெட்டவனா....???!!!