கருமையான மேகக் கூட்டங்களே ...
கூடிக் கூடி எங்கே போகிறீர்கள்??
வெண்மை மனம் கொண்ட
வஞ்சமில்லா மனிதர்கள்
வாழும் இடம் தேடியா ??
வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள் .....
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடியவர்கள் இங்கில்லை ....
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்ற
தன்னலமற்றவர்கள் இங்கில்லை...
மோதி முட்டி உடைந்து மழையைக் கொட்டு...
மழை நீரால் மாந்தர்களைக் கழுவு...
மனசாட்சியைத் தட்டி எழுப்பு ...
உறங்குவது போல் உலகை ஏமாற்றி
உல்லாசத்தில் இருக்கும் எங்கள்
உள்மனதை உண்மையாக்கு...
உண்மையாய் உலகில் வாழ
உறுதி கொடு....!!!
No comments:
Post a Comment