Thursday, November 17, 2011

புரிந்தது மரமே.....!!!

ஓ...... மரமே...!!
உனது இலைகளை 
எல்லாம் எங்கே....???

இலையுதிர் காலத்தால் 
இலைகளை இழந்தாயா ...???

ஏமாற்றாதே எங்களை...
எனக்குத் தெரியும்...
இலைகளின் உயிரை 
உறிந்து கொண்டு சருகுகளை 
உதிர்த்து விட்டாய் ....!!!
உயிர் கொடுத்து 
உருவாக்குவாய் இலைகளை 
அரும்புகளாய்.....
இயற்கை  எழில் கொஞ்சும் 
இளவேனிற் காலத்தில்......!!!

பனியிலிருந்து இலைகளை 
பத்திரப் படுத்தும் உன் 
புத்திசாலித் தனம் 
புரிந்தது மரமே......!!!

 

No comments:

Post a Comment